ADVERTISEMENT

“இந்திய மக்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்”.. விமான விபத்து, வெள்ளம் குறித்து அபுதாபி மகுட இளவரசர் ட்விட்டரில் பதிவு..!!

Published: 8 Aug 2020, 7:08 PM |
Updated: 8 Aug 2020, 7:09 PM |
Posted By: jesmi

அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், கேரளாவில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட இரு துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு இரங்கல் செய்தி ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று (ஆகஸ்ட் 7, 2020) ஏற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மூணாரில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 24 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மேலும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது.

இந்நிலையில், இது குறித்து மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் நண்பர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சோகமான விமான விபத்து மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான காலங்களில் எங்கள் பிரார்த்தனைகளில் உங்களையும் நாங்கள் நினைவு கூறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT