ADVERTISEMENT

ஓமான் : வணிக நடவடிக்கைகளில் ஐந்தாம் கட்ட தளர்வை அறிவித்த உச்சக்குழு..!!

Published: 18 Aug 2020, 11:53 AM |
Updated: 18 Aug 2020, 11:53 AM |
Posted By: admin

ஓமானில் கொரோனாவின் பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வரும் நிலையில், வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஐந்தாம் கட்ட நடவடிக்கையை ஓமானில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஐந்தாம் கட்ட நடவடிக்கையில் ஒரு பகுதியாக முத்ரா சூக், சுற்றுலா உணவகங்கள், மீன் சந்தைகள், விளையாட்டு அரங்குகள் போன்றவை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீண்டும் தொடங்கப்பட்டுள்ள வணிக நடவடிக்கைகள்

  • திறக்கப்படாமல் இருக்கும் மீன் சந்தைகள்.
  • முத்ரா சூக் (Muttrah Souq)
  • பாரம்பரிய சூக்குகளின் வணிக நடவடிக்கைகள்.
  • தொலைபேசி அட்டைகளின் விற்பனை
  • வாகனத்திற்கு உள்ளே இருந்து கார் கழுவுதல்
  • புகையிலை மற்றும் அது தொடர்புடைய தயாரிப்புகளை விற்கும் கடைகள்
  • சுற்றுலா தலத்தில் இருக்கும் விளையாட்டு அரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் (ஹோட்டல் விருந்தினர்கள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்).
  • செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் பிற வெளியீடுகளின் அச்சிடுதல்
  • மனிதவள அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பயிற்சி நடவடிக்கைகள்.
  • ரியல் எஸ்டேட் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தேசிய அணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான சில விளையாட்டு அரங்கங்கள்.

மேற்கூறிய வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டு தற்பொழுது அவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.