ADVERTISEMENT

குவைத் : டாக்ஸிகளில் மூன்று நபர்கள் பயணிக்க இன்று முதல் அனுமதி..!!

Published: 20 Aug 2020, 12:38 PM |
Updated: 23 Aug 2020, 4:15 PM |
Posted By: admin

குவைத்தில் கொரோனாவின் பாதிப்புகள் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டாக்ஸிகளில் 3 நபர்கள் பயணிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் ஆரம்பித்ததையொட்டி டாக்ஸிகளில் ஒரு நபர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால், டாக்ஸி நிறுவன முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இந்த முறையை நீக்குமாறும் அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்பொழுது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், டாக்ஸிகளில் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் முறையை மாற்றி மூன்று நபர்கள் வரை பயணிக்கலாம் என அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT