ADVERTISEMENT

ஓமானில் கடந்த 3 நாட்களில் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு..!! 28 பேர் உயிரிழப்பு..!!

Published: 24 Aug 2020, 1:29 PM |
Updated: 24 Aug 2020, 1:30 PM |
Posted By: admin

ஓமானில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா வைரஸால் 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நிலவரங்கள் தெரிவிக்கப்படாது என்று சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்திருந்ததையொட்டி, கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு குறித்த பதிவை சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 84,509 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 3 நாட்களில் 28 பேர் ஓமானில் கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளதாகவும் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 637 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஓமானில் தற்பொழுது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 78,912 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.