ADVERTISEMENT

ஓமானில் நாளை முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள துறைகள்..!! உச்சக்குழு அறிவிப்பு.!!

Published: 25 Aug 2020, 2:09 PM |
Updated: 25 Aug 2020, 2:09 PM |
Posted By: admin

ஓமானில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு, கொரோனா பரவலின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு கட்டங்களாக தளர்த்தி வருகிறது. இந்நிலையில், ஓமானில் இயல்பு நிலை மீண்டும் தொடங்குவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் ஆறாம் கட்ட தொகுப்பை உச்சக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. இவை நாளை (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் அனைத்தும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத் தேவைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள்

  • பொது உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (Public restaurant and cafe)
  • உடற்பயிற்சி கூடங்கள் (Gym)
  • சலூன் கடைகள் (Barber Shops)
  • அழகு நிலையங்கள் (Beauty Parlours)
  • நீர் விளையாட்டுகள் (Watersport Facilities)
  • திருமண பொருட்களின் விற்பனை மற்றும் வாடகை
  • பாரம்பரிய மருத்துவ கிளினிக்குகள்
  • ஒட்டக பந்தயங்கள் (Camel Racing)
  • ஹோட்டல் நிறுவனங்களில் இருக்கக்கூடிய மீட்டிங் ஹால் (Conference Hall in Hotel)