ADVERTISEMENT

VBM Phase-6: செப்டம்பர் 1 முதல் தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 25 Aug 2020, 3:46 PM |
Updated: 25 Aug 2020, 3:49 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் 6 ம் கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கும், ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கும் இடையே செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரையிலும் இயக்கப்படவுள்ள சிறப்பு விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டு அதன் மூலமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற நாடுகளின் குடியிருப்பு விசாக்கள் வைத்திருக்கும் இந்திய குடிமக்களும் நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டு அனைவரும் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர்.

தற்போது இந்திய நாட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் ஆறாம் கட்டம் தொடங்குவதை முன்னிட்டு, ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள அமீரகத்திற்கும் சிறப்பு விமானங்களை இயக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து தமிழகத்திலிருந்து அமீரகம் செல்லும் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானங்கள் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவிற்கு இயக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானங்களில் இந்த முறை அதிகளவிலான விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனினும் தமிழகத்தின் பிற விமான நிலையங்களான மதுரை மற்றும் கோவையிலிருந்து அமீரகத்திற்கு எந்த ஒரு சிறப்பு விமானமும் இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியிலிருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்…

ADVERTISEMENT
சென்னையிலிருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்…

VBM 6-ம் கட்டத்தில் அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!