ADVERTISEMENT

உணவகங்கள், சலூன் கடைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!! மஸ்கட் முனிசிபாலிடி அறிவிப்பு..!!

Published: 26 Aug 2020, 2:03 PM |
Updated: 26 Aug 2020, 2:08 PM |
Posted By: admin

ஓமானில் கொரோனாவிற்கான உச்சக்குழு கொரோனாவின் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த சலூன் கடைகள், உணவகங்கள், கஃபேக்கள் போன்றவற்றை இன்று முதல் மீண்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் வணிக நடவடிக்கைகளில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் சலூன் கடைகள் செயல்படுவதில் சில நெறிமுறைகளையும் மஸ்கட் முனிசிபாலிடி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மஸ்கட் முனிசிபாலிடி வெளியிட்ட அறிக்கையில், 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் உணவகங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது.

மேலும், கடுமையான வழிகாட்டுதல்களின்படி, கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு ஊழியர்களின் வெப்பநிலையை சரிபார்க்கவும் மஸ்கட் முனிசிபாலிடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வேலை தொடங்குவதற்கு முன்பும் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு பிறகும் தொழிலாளர்கள் வெப்பநிலையை இந்த அமைப்பு சரிபார்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

  • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் உபகரணங்களில் உணவு மற்றும் பானங்களை வழங்க வேண்டும்.
  • ஒரு மேஜையில் நான்கு பேருக்கு மேல் அமரக்கூடாது
  • வாடிக்கையாளர்கள் சாப்பிடும் நேரங்களை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • இரண்டு மீட்டர் அளவிலான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • உணவகங்களில் சாப்பிட்டு முடித்தவுடன் வெளியேற வேண்டும்
  • கடைக்குள் நுழைவதற்கு முன்பு தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வெப்பநிலையைச் சரிபார்க்க வேண்டும் மற்றும் வெப்பநிலை 37c ஐத் தாண்டியவர்களை உணவகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது
  • உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • பஃபே, ஷிஷா போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

முடிதிருத்தும் கடைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்டவர்கள் முடிதிருத்தும் கடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
  • 2-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை (அளவைப் பொறுத்து) கடைக்குள் அனுமதிக்க கூடாது.
  • சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
  • கடைக்குள் காத்திருப்பதை அனுமதிக்கக்கூடாது.
  • சலூன் கடைகளில் பணிபுரியும் நபர்கள் PPE (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்), முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
  • கத்தரிக்கோல் மற்றும் பிற மறுபயன்பாட்டு கருவிகளை பயன்படுத்தும் போது ஒவ்வொரு நபருக்கும் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும்.
  • எல்லா கடைகளிலும் நிலையான விவரக்குறிப்புகளின்படி சுத்திகரிப்பு சாதனங்கள் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் போது சோப்புடன் கைகளை கழுவ வேண்டும்.
  • தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஆடைகளை சுகாதாரமாக கழுவ வேண்டும்.
  • கடையில் நுழைவதற்கு முன்பும் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் பிறகும் ஊழியர்களின் வெப்பநிலை சரிபார்க்கப்பட வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்கு தேநீர் அல்லது சிற்றுண்டி வழங்குவது, மற்றும் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை காத்திருக்கும் இடங்களில் வைத்திருப்பது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.