ADVERTISEMENT

கத்தார், இந்தியா இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

Published: 30 Aug 2020, 11:18 AM |
Updated: 30 Aug 2020, 11:18 AM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தில் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு மற்றும் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரையிலான நாட்களில் வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டம் இயக்கப்படும் என இந்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதனையொட்டி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிடப்பட்ட விமானப் பட்டியலில் அறிவித்துள்ள விமானங்களுக்கான முன்பதிவினை பயணிகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே அடுத்த மாதம் இயக்கப்படும் விமானங்களில் 6 விமானங்கள் தமிழகத்திற்கும், அதே போல் 6 விமானங்கள் தமிழகத்தில் இருந்து கத்தாருக்கும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கத்தாரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்

 

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து கத்தாருக்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்