ADVERTISEMENT

ஓமான் : அக்டோபர் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்..!! உச்சக்குழு அறிவிப்பு..!!

Published: 7 Sep 2020, 2:00 PM |
Updated: 7 Sep 2020, 2:01 PM |
Posted By: admin

ஓமானில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக அவை பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தாக்கத்தினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்பொழுது வரை சிறப்பு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் இயக்குவது குறித்து ஓமான் நாட்டின் கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உச்சக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் அக்டோபர் 1, 2020 முதல் சர்வதேச விமானங்களுக்கான விமான போக்குவரத்தை மீண்டும் திறக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட இடங்களுக்கான சுகாதார தரவுகளின்படி விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT