ADVERTISEMENT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கிறீர்களா.. டிக்கெட் முன்பதிவிற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை என்ன..!!

Published: 9 Sep 2020, 5:40 PM |
Updated: 9 Sep 2020, 5:56 PM |
Posted By: admin

வெளிநாடுகளிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு பயணம் செல்லவிருப்பவர்கள் டிக்கெட் முன்பதிவிற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டியவை குறித்து விமான நிறுவனம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு பயணிக்க விரும்புபவர்கள் இந்திய அரசு அறிவித்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

  1. வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே www.newdelhiairport.in என்ற ஆன்லைன் போர்ட்டலில், பயணம் தொடர்பான சுய அறிவிப்பு படிவத்தை (Self Declaration Form) பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

 

2. பயணம் மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோம் என்று மேலே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் போர்ட்டலில் ஒரு உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும் (ஏழு நாட்கள் தங்கள் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தல் மற்றும் அதன்பின்னர் வீட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல்)

ADVERTISEMENT

3. 14 நாட்கள் முழுவதும் வீட்டு தனிமைப்படுத்தலானது கர்ப்பம், குடும்பத்தில் ஏற்பட்ட மரணம், கடுமையான நோய் மற்றும் 10 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர் போன்ற காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படலாம்.

4. அவ்வாறு பயணிப்பவர்கள் தாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன் குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் போர்ட்டலில் தொடர்பு கொள்வதால் அரசாங்கம் எடுக்கும் முடிவே இறுதியானது.

5. பயணம் செய்பவர்கள் இந்தியா வந்தடைந்தவுடன் பயணம் புறப்படுவதற்கு முன்பாக பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழை சமர்பிப்பதன் மூலம், 7 நாட்கள் கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட், விமானம் ஏறுவதற்கு குறைந்தது 96 மணி நேரத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.

  • நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் மேலே கூறப்பட்டுள்ள ஆன்லைன் போரட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பித்த கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டை வருகை தரும் விமான நிலையங்களுக்கு கொண்டு வர வேண்டும்.
  • ஒவ்வொரு பயணியும் கொரோனா சோதனை அறிக்கை முடிவின் நம்பகத்தன்மை குறித்து ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். சோதனை முடிவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாவிட்டால் குற்றவியல் வழக்கை சந்திக்க நேரிடும்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர் கொரோனாவிற்கான நெகடிவ் செர்டிபிகேட் வைத்திருத்தல் கட்டாயம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

சென்னை வரும் சர்வதேச பயணிகளின் “தனிமைப்படுத்தல்” குறித்து தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!! பயணிகள் மகிழ்ச்சி..!!