ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து குவைத் வர விரும்புபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்..!!

Published: 12 Sep 2020, 3:46 PM |
Updated: 12 Sep 2020, 3:46 PM |
Posted By: admin

கொரோனா பரவலின் காரணமாக, இந்தியாவில் இருந்து குவைத் நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருக்கும் இந்தியர்கள் குவைத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ள லிங்கில் (https://docs.google.com/forms/) சென்று ஆன்லைனில் தங்களின் விபரங்களை நிரப்பி பதிவு செய்யுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு பதிவு செய்வதன் நோக்கம் குவைத்திற்கு பயணிக்க விரும்பும் இந்தியர்களின் தரவுகளை சேகரிப்பதற்காக மட்டுமே என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து குவைத்திற்கு விமான சேவைகள் தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் குவைத் நாட்டின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்றும் தூதரகம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்கும் cw1.kuwait@mea.gov.in ஐ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் பணிபுரியும் இந்தியர்களில் விடுமுறைக்காக தாயகம் சென்ற பலர், விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக குவைத் திரும்ப முடியாமல் உள்ளனர். தற்பொழுது குவைத் நாட்டின் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்தியா உட்பட 32 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால் அந்தந்த நாடுகளில் தற்பொழுது வசிப்பவர்கள் குவைத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT