ADVERTISEMENT

ஓமானில் கொரோனா தொற்று பரவல் வீதத்தில் வெளிநாட்டவர்களே அதிகம்..!! தேசிய கணக்கெடுப்பில் தகவல்..!!

Published: 16 Sep 2020, 6:33 PM |
Updated: 16 Sep 2020, 6:33 PM |
Posted By: admin

COVID-19 நோய்த்தொற்றுக்கான செரோபிரெவலன்ஸ் பற்றிய தேசிய கணக்கெடுப்பின் முடிவுகளில் (survey of seroprevalence), அதன் முதல் கட்டத்தில், வெளிநாட்டவர்களே 8.7 சதவீத பொது COVID-19 நோய்த்தொற்று பாதிப்பு விகிதத்தை பதிவு செய்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தேசிய கணக்கெடுப்பு குறித்து ஓமான் நியூஸ் ஏஜென்சி (ONA) ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “கோவிட் -19 நோய்த்தொற்றுக்கான செரோபிரெவலன்ஸ் பற்றிய தேசிய கணக்கெடுப்பின் முடிவுகளில், அதன் முதல் கட்டத்தில், ஓமானில் COVID-19 நோய்த்தொற்று பரவல் வீதம் 6 சதவீத அளவில் இருப்பதாகவும், நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களில் ஓமானியர்கள் பாதிப்பு விகிதம் 3.9 சதவீத அளவில் இருப்பதாகவும், வெளிநாட்டவர்கள் பாதிப்பு விகிதம் 8.7 சதவீத அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகளின் அடிப்படையில் கொரோனா நோய்த்தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் தென்படாதவர்கள் என மொத்தம் 276,685 பேர் ஓமானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, ஓமான் நாட்டில் அதிகபட்சமாக மஸ்கட் மற்றும் அல் வுஸ்தா ஆகிய பகுதிகள் இரண்டிலும் 9.2 சதவிகிதம் என்ற மிக அதிக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.