ADVERTISEMENT

ஓமான்: தோஃபர் கவர்னரேட்டில் விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுன் அக்டோபர் 1 முதல் நீக்கம்..!! உச்சக்குழு அறிவிப்பு..!!

Published: 22 Sep 2020, 2:36 PM |
Updated: 22 Sep 2020, 2:36 PM |
Posted By: admin

ஓமானில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. ஓமானின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் தோஃபர் கவர்னரேட்டில் (Dhofar Governorate) லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும், வெளியில் இருந்து அப்பகுதிக்கு மக்கள் நுழையவும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஓமானில் கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி நாடு முழுவதுமான லாக்டவுன் நீக்கப்பட்டு, தோஃபர் பகுதியில் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை லாக்டவுன் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1 முதல் தோஃபர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுன் நீக்கப்படுவதாக இன்று உச்சக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT