ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து சவூதி வருவதற்கு தற்காலிகத் தடை..!! அரசு அறிவிப்பு..!!

Published: 23 Sep 2020, 12:36 PM |
Updated: 23 Sep 2020, 12:36 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளானது கொரோனாவின் தாக்கத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் பின்னர் தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருவதற்கு சவூதி அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது

சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, சவூதி அரேபியாவிற்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் மேற்கூறிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்ற பயண வரலாறு கொண்ட நபர்களும் சவூதி அரேபியா வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது 6 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT