ADVERTISEMENT

UAE: அக்டோபர் மாதத்தில் இயக்கப்படவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு புக்கிங் தொடக்கம்..!!

Published: 23 Sep 2020, 5:17 PM |
Updated: 23 Sep 2020, 5:17 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்டுள்ள ஏர் பபுள் எனும் சிறப்பு ஒப்பந்த நடவடிக்கையின் கீழ், இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலம் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே செப்டம்பர் மாத இறுதி வரையிலும் சிறப்பு விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு விமானங்களின் பட்டியலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், செப்டம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடியவிருக்கும் வேளையில், ஏர் பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திலும் சிறப்பு விமான சேவைகள் தொடரும் எனவும், அடுத்த மாதம் முழுவதும் இயக்கப்படவுள்ள சிறப்பு விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் இன்று (செப்டம்பர் 23) மாலை 4 மணி முதல் தொடங்கிவிட்டதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையினால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்த இந்திய நாட்டவர்களை திருப்பி அழைத்து வர வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் தற்போது வரையிலும் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT