வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளானது அக்டோபர் மாதமும் தொடரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த மாதத்தில் இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
தூதரகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, ஓமானில் இருந்து 70 விமானங்கள் இந்தியாவிற்கு செல்லவிருப்பதாகவும், அதில் 10 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்கள் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமானில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்
Schedule of Flights from #Oman under #VandeBharatMission for the month of October.
Indian nationals who wish to travel to #India in these flights, may please confirm & provide information using the following link: https://t.co/SjoiSjIKBF https://t.co/HeGhWePQT5 pic.twitter.com/B8hUjrvUiL
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) September 24, 2020
