ADVERTISEMENT

நான் ஸ்டாப்பாக 43 மணி நேரம் தொடர்ந்து இயங்கவுள்ள மெட்ரோ.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் துபாய்..

Published: 26 Dec 2025, 12:06 PM |
Updated: 26 Dec 2025, 12:18 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயின் டவுன்டவுன் துபாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீட்டிக்கப்பட்ட துபாய் மெட்ரோ செயல்பாடுகள் மற்றும் படிப்படியாக சாலை மூடல்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் பயணிகள் போக்குவரத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பை ஆதரிக்க துபாய் மெட்ரோ ரெட் மற்றும் கிரீன் லைன், துபாய் டிராமுடன் சேர்ந்து, 43 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ சேவைகள் வரும் டிசம்பர் 31, 2025 புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 1, 2026 வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை இயங்கும். துபாய் டிராம் சேவைகள் டிசம்பர் 31 புதன்கிழமை காலை 6 மணி முதல் ஜனவரி 2 வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாக கொண்டாடப்படும் என்பதால் ஆண்டுதோறும் டவுன்ட்டவுன் துபாய் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள். மேலும் கொண்டாட்டமானது நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால் மக்களின் போக்குவரத்திற்கு வசதி ஏற்படுத்தவும் போக்குவரத்தை எளிதாக்கவும் இவ்வாறு மெட்ரோ, ட்ராம் போன்றவற்றின் இயக்க நேரங்கள் நீட்டிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel