ADVERTISEMENT

1 கிலோ தங்கம் வென்ற இந்திய சிறுவன்: துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் அடித்த அதிர்ஷ்டம்!!

Published: 27 Jan 2026, 8:27 PM |
Updated: 27 Jan 2026, 8:27 PM |
Posted By: Menaka

துபாயில் சமீபத்தில் நடந்து முடிந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக ராஃபிள் டிராக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அதில் இந்த ஆண்டு இந்திய சிறுவன் ஒரு கிலோ தங்கத்தை வென்றிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த 13 வயது இந்தியச் சிறுவன் ஒருவன், துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) நடப்பு சீசனின் போது துபாய் ஜூவல்லரி குழுமத்தால் (DJG) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாபெரும் ராஃபிளில் ஒரு கிலோ தங்கம் வென்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனான அனிகேத் ஆர் நாயர், இந்த மாத தொடக்கத்தில் தனது குடும்பத்தினர் துபாயில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு நகையை (bracelet) வாங்கிய பிறகு இந்த பிரத்யேக டிராவில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அந்தச் சீட்டு சிறுவனின் பெயரில் வழங்கப்பட்ட நிலையில், ஒரு சாதாரண கடைவீதி ஷாப்பிங், அவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆச்சரியமாக மாறியுள்ளது.

அடிக்கடி மோசடி செய்திகள் வருவதால், முதலில் அந்த வெற்றி குறித்து அறிவிக்க வந்த தொலைபேசி அழைப்பு ஒரு மோசடி என்று நினைத்ததாகவும், ஆனால், DJG-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, அந்தச் செய்தி உண்மையானது என்பதை உணர்ந்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தங்கத்தின் விலை நாளுக்குநாள் உச்சத்தில் அதிகரிக்கும் நிலையில், 500,000 திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள அந்தத் தங்கம், 250 கிராம் எடையுள்ள நான்கு தங்கக் கட்டிகளாக துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும், இளம் வெற்றியாளரின் உற்சாகம், துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் மாயாஜாலத்தையும் தங்கத்தின் நீடித்த கவர்ச்சியையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது என்று அவர் விவரித்துள்ளார்.

சிறுவனின் தந்தை, பரிசுக்கான வரிகளைச் செலுத்திய பிறகு, பரிசை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பெரும்பகுதி குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகச் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மாபெரும் டிரா, டிசம்பர் 5, 2025 முதல் ஜனவரி 11, 2026 வரை நடைபெற்ற DJG-யின் DSF ப்ரோமோஷனின் ஒரு பகுதியாகும். இதன் படி, பிரச்சாரத்தில் பங்கேற்கும் நகைக்கடைகளில் 1,500 திர்ஹம்கள் அல்லது அதற்கு மேல் செலவழித்த வாடிக்கையாளர்கள் டிராவில் சேர்க்கப்பட்டனர், இதில் வாராந்திர பரிசுகளும், ஐந்து கிலோ தங்கம் வரையிலான ஒரு மாபெரும் பரிசும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel