ADVERTISEMENT

டிரக்ஸ் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

Published: 25 Jan 2021, 3:40 PM |
Updated: 25 Jan 2021, 3:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்று அபுதாபி அரசு அறிவித்து கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த சோதனை முடிவானது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அபுதாபிக்குள் வரும் டிரக் ட்ரைவ்ர்ஸ்களுக்காக புதிய விதிமுறையை அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இக்குழு அறிவித்துள்ளதன்படி, வரும் பிப்ரவரி 1 முதல், லாரிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் அனைத்து ஓட்டுநர்களும் ஏழு நாட்களுக்குள் பெறப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தடுப்பூசி போடப்பட்ட ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு 7 நாட்களுக்கும் ஒருமுறை இலவச PCR சோதனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட நுழைவு விதிகளை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தந்து கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அரசு அறிவித்திருக்கும் இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.