ADVERTISEMENT

“குடும்பம், சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நேரம்”ரமலான் மாதத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிரும் அமீரக தலைவர்கள்!!

Published: 18 Feb 2026, 9:28 AM |
Updated: 18 Feb 2026, 9:28 AM |
Posted By: Menaka

புனித ரமலான் மாதத்தின் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டதைத தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், உலகெங்கிலும் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவரது X கணக்கில் வெளியிட்ட பதிவில், “புனித ரமலான் மாதத்தின் வருகையுடன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மாதத்தினை சிந்தனை, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பம் மற்றும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு நேரமாக விவரித்துள்ளார்.

நேற்றைய தினம் கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு ரமலான் 2026 பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கும் என்று உறுதிப்படுத்தியது, அதாவது புதன்கிழமையான இன்று முதல் நோன்பு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் கீழ், பிறை நிலவைப் பார்ப்பதைப் பொறுத்து மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த ஆண்டு, ஷாபான் 29 நாட்களை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும், அமீரக மக்களுக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், ரமலான் ஒரு தாராளமான மாதம் மற்றும் ஒரு நல்ல பருவம் என்று கூறியதுடன் நன்மை, கொடுப்பது, குடும்பக் கூட்டங்கள் மற்றும் இறை வணக்கம் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்த மாதமானது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் திரும்ப வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி விவகார அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான், ரமலான் ஆசீர்வாதங்கள் மற்றும் ஒற்றுமையின் மாதமாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்த புனித மாதத்தில் இரக்கம், ஒற்றுமை மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றான ரமலான் மாதத்தில் மாதம் முழுவதும் நோன்பு இருப்பதால் இதற்கிணங்க பள்ளி, அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயக்க நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel