ADVERTISEMENT

வளைகுடா, மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரத்து செய்யப்படும் 700-க்கும் அதிகமான விமானங்கள்..

Published: 1 Mar 2026, 11:01 AM |
Updated: 1 Mar 2026, 11:03 AM |
Posted By: admin

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் (Cirium) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மத்திய கிழக்கில் திட்டமிடப்பட்ட 4,329 விமானங்களில், 716 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தரவு காட்டுகிறது. அத்துடன் தொடர்ந்து விமான நிறுவனங்கள் விமானங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடுவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல விமான நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் அட்டவணையை ரத்து செய்யவில்லை, ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தொடர்ச்சியான ஏவுகணை பரிமாற்றங்கள் மற்றும் தெஹ்ரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் காரணமாக அந்த விமானங்களில் பெரும்பாலானவை இயக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் விமானங்களை ரத்து செய்த சில விமான நிறுவனங்களில் எமிரேட்ஸ், ஃப்ளைடதுபாய், எதிஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா, கத்தார் ஏர்வேஸ், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA), ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈரான் அசேமன் ஏர்லைன்ஸ், ஈராக்கி ஏர்வேஸ், ஜசீரா ஏர்வேஸ், குவைத் ஏர்வேஸ், EI AI, எகிப்து ஏர், ராயல் ஜோர்டானியன், சவுதியா, துருக்கிய ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ், விஸ் ஏர், ஓமன் ஏர், ஃப்ளைனாஸ் ஆகியவை அடங்கும் என்று சிரியம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெவ்வேறு இடங்களில் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து பல பிராந்திய நாடுகள் சனிக்கிழமை தங்கள் வான்வெளியை மூடின. ஞாயிற்றுக்கிழமையும் பல வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அத்துடன், சனிக்கிழமை 11 நாடுகளில் 1,800 க்கும் மேற்பட்ட உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.