ADVERTISEMENT

தவறான தகவல்களை பரப்பினால் 20,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை.. எச்சரிக்கும் துபாய் போலீஸ்..

Published: 4 Mar 2026, 3:26 PM |
Updated: 4 Mar 2026, 3:26 PM |
Posted By: admin

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான நேரத்தில், அமைதியாக இருப்பது, அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மற்றும் மிக முக்கியமாக, பீதியை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அமீரக அரசும் மக்களுக்கு அவ்வப்போது இதனை நினைவூட்டி வருகின்றது. தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரியது என்பதை துபாய் காவல்துறையும் தற்பொழுது பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “வதந்திகள், தவறான தகவல்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு முரணான அல்லது பொதுமக்களில் பீதியை ஏற்படுத்தக்கூடிய அல்லது பொதுமக்களின் பாதுகாப்பு, ஒழுங்கு அல்லது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு தகவலையும் பகிர்வது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் “இதனை மீறுபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம்சிற்கும் குறையாத அபராதம் உட்பட குற்றவியல் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றும் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் முக்கியமான தளங்களை புகைப்படம் எடுப்பதற்கு எதிராகவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து கூறுகையில் “இது வெறும் புகைப்படம் போல் தோன்றலாம். ஆனால் சிலருக்கு, இது தகவல். பாதுகாப்பு அல்லது முக்கியமான தளங்களை புகைப்படம் எடுக்கவோ பகிரவோ வேண்டாம். அவற்றைப் பாதுகாப்பது நமது சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஒரு தேசியப் பொறுப்பு” என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 முதல் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனது பழிவாங்கும் தாக்குதல்களை விரிவுபடுத்தியதிலிருந்து, பல ஐக்கிய அரபு அமீரக அரசானது தவறான தகவல்கள், பழைய வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்வதற்கு அல்லது பரப்புவதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்துள்ளன.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி, ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் பின்வரும் செயல்கள் புரிய அனுமதிக்கப்படவில்லை:

  • தவறான செய்திகள் அல்லது தரவுகளை அறிவித்தல், பரப்புதல், அல்லது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு முரணான தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது தவறான அறிக்கைகளை கூறுதல்
  • பொதுக் கருத்தைத் தூண்டக்கூடிய அல்லது பொது அமைதியைக் குலைக்க, மக்களிடையே பயங்கரவாதத்தைப் பரப்பக்கூடிய அல்லது பொது நலன், தேசிய பொருளாதாரம், பொது ஒழுங்கு அல்லது பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பதிவையும் பதிவு செய்தல்.

எனவே பொதுமக்கள் இதனை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.