மார்ச் 11 அன்று ஈரானில் இருந்து ஏவப்பட்ட 13 ஏவுகணைகள் மற்றும் 39 ட்ரோன்களை (UAV) இடைமறித்து அழித்ததாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 7 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 39 UAV-களை தாக்கியதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர், அவற்றில் நான்கு பேர் துபாய் ஏர்போர்ட்டில் இரண்டு ட்ரோன்கள் விழுந்த சம்பவத்தில் காயமடைந்தனர் என கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை 268 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,514 ட்ரோன்களை தாக்கியுள்ளது. இந்த தாக்குதல்களில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், இதில் எமிராட்டி, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேச நாட்டினர் அடங்குவர்.
மார்ச் 11 ஆம் தேதி நிலவரப்படி, இது வரை 131 சிறிய மற்றும் மிதமான காயங்கள் பதிவாகியுள்ளன. இவை ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அஜர்பைஜான், ஏமன், உகாண்டா, எரிட்ரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமொரோஸ், துருக்கி, ஈராக், நேபாளம், நைஜீரியா, ஓமான், ஜோர்டான், பாலஸ்தீனம், கானா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடையே பதிவாகியுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையை சமரசம் செய்யும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்கொள்ளும் என்றும், நாட்டின் தேசிய நலன்கள் மற்றும் திறன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel