ADVERTISEMENT

UAE: ட்ரோன் தாக்குதலால் ஃபுஜைரா எண்ணெய் தொழில்துறை மண்டலத்தில் தீ விபத்து..

Published: 16 Mar 2026, 12:39 PM |
Updated: 16 Mar 2026, 12:41 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ட்ரோன் தாக்குதலின் விளைவாக, ஃபுஜைரா எண்ணெய் தொழில்துறை மண்டலத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக ஃபுஜைரா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே போல ஃபுஜைரா எமிரேட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக சம்பவத்திற்கு பதிலளிக்கத் தொடங்கி, தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்ததை ஊடக அலுவலகம் உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.