ADVERTISEMENT

துபாய் – ஓமான் இடையே ஒப்பந்தமான ‘Green Corridor’ திட்டம்.!! சரக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை.!!

Published: 19 Mar 2026, 1:44 PM |
Updated: 19 Mar 2026, 1:44 PM |
Posted By: Menaka

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரினால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் வான்வெளி மற்றும் கடல்வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரினால் அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளானதால் சரக்கு விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ADVERTISEMENT

இந்நுலையில், அமீரகத்தில் சரக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த அமீரகத்திற்கும் ஓமானுக்கும் இடையே கடல் மற்றும் வான்வழி சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்தவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், துபாய் சுங்கத்துறையானது ஓமானுடன் ‘பசுமை வழித்தடம் (Green Corrido)r’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த புதிய அமைப்பின் கீழ், வேகமான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட சுங்க நடைமுறைகளைப் பயன்படுத்தி, துபாய் துறைமுகங்களுக்கு வரவேண்டிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்கு விமானங்கள் ஓமானி துறைமுகங்கள் வழியாக, துபாய் துறைமுகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது

விரைவான சுங்க நடைமுறைகளின் கீழ், ஓமானில் சமர்ப்பிக்கப்படும் போக்குவரத்து விதிகளுடன் இந்த செயல்முறை தொடங்குகிறது. பின்னர், சரக்குகள் பசுமை வழித்தடம் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. போக்குவரத்தின் போது சரக்குகளின் பாதுகாப்பையும், அதன் முழுமையையும் உறுதி செய்வதற்காக, கப்பல் முகவர்களால் கண்டெய்னர்கள் சீல் வைக்கப்படும்.

பின்னர் ஓமான் துறைமுகத்திலுருந்து சாலை மார்க்கமாக துபாய் மற்றும் ஓமான் எல்லைப்பகுதியான ஹத்தா எல்லையை வந்தடைந்தவுடன், சுங்க அனுமதிக்குச் செல்வதற்கு தேவையான, சரக்கு விவரப் பட்டியல் மற்றும் சரக்குச் சீட்டு போன்ற முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்த முன்னெடுப்பின் நோக்கம், தாமதங்களைக் குறைப்பது, செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும் என்றும், இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானுக்கு இடையே வணிகங்கள் பொருட்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel