வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று குவைத் சர்வதேச விமான நிலையம் பல ஈரானிய ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானது என குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி, குவைத் செய்தி நிறுவனத்திடம் (KUNA) தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களால் விமான நிலையத்தின் ரேடார் அமைப்பிற்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தை தொடர்ந்து அவசரக் குழுக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகப் பதிலளித்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.