ADVERTISEMENT

அபுதாபி: ஏவுகணை சிதறல்களால் ஏற்பட்ட எரிவாயு நிலைய தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்..

Published: 4 Apr 2026, 6:50 AM |
Updated: 4 Apr 2026, 7:59 AM |
Posted By: admin

வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்புக்குப் பிறகு விழுந்த சிதறல்களால் அபுதாபியின் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு எகிப்தியர் பரிதாபமாக உயிரிழந்ததாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் இரண்டு எகிப்தியர்கள் உட்பட மேலும் நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, அந்த இடத்தில் இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், அவசரகால மீட்புக் குழுக்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்த நிலையங்கள் கணிசமான சேதத்தைச் சந்தித்துள்ளன என்றும் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அபுதாபி நேற்று (ஏப்ரல் 3) கூறியிருந்தது.

முன்னதாக, மார்ச் 19 அன்று, வெற்றிகரமான இடைமறிப்புகளைத் தொடர்ந்து ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததால் ஹப்ஷான் எரிவாயு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அப்போது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. அதே நாளில், அபுதாபியின் பாப் எரிவாயு தளமும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT