ADVERTISEMENT

துபாயின் முக்கிய சாலைகள் வார இறுதியில் மூடல்: போக்குவரத்து மாற்றுப்பாதைகளை அறிவித்த அதிகாரிகள்!!

Published: 4 Apr 2026, 5:24 PM |
Updated: 4 Apr 2026, 5:33 PM |
Posted By: Menaka

துபாயின் முக்கியப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட சாலைப் பணிகள் நடைபெறுவதால், இந்த வாரம் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகள் குறித்து துபாயில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில், கெய்ரோ ஸ்ட்ரீட் ரவுண்டானா மற்றும் அல் வஹிதா ஸ்ட்ரீட் ரவுண்டானாவிற்கு இடையில் (அல் மம்சார் நோக்கிய பகுதி), ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 6, திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஒரு மாற்றுப்பாதை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த மூடல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்றொரு அறிவிப்பில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மற்றும் ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட்டின் இண்டுர்செக்ஷனிலும் ஒரு தற்காலிக மாற்றுப்பாதையை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு வசதியாக, இந்த மாற்றுப்பாதை ஏப்ரல் 4, சனிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 6, திங்கட்கிழமை காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, சாலைப் பணிகள் நடைபெறும் காலத்தில் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, வாகன ஓட்டிகள் அங்குள்ள வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்றுமாறும், அல் அஸாயில் ஸ்ட்ரீட், அல் சுஃபோஹ் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் சாலை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT