ADVERTISEMENT

துபாய் அறிமுகப்படுத்தும் ‘Spot for Shops’ திட்டம்: பார்க்கிங் கட்டணத்தை மிச்சப்படுத்த புதிய முயற்சி..!!

Published: 9 Apr 2026, 12:34 PM |
Updated: 9 Apr 2026, 12:34 PM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய கட்டணப் பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான பார்க்கின் (parkin) நிறுவனம் ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களின் சுற்றுப்புற வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதன் மூலம், தங்கள் பார்க்கிங் கட்டணத்தை கேஷ்பேக்காக மாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது “ஸ்பாட் ஃபார் ஷாப்ஸ்” (Spot for Shops) என்று அழைக்கப்படும் இந்தச் சேவையானது, பங்கேற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்க்கிங் கட்டணத்தை ஈடுசெய்ய அனுமதிக்கிறது. இந்த கேஷ்பேக் தொகையானது, பார்க்கின் செயலி மூலம் சரிபார்க்கப்பட்டு, பயனரின் வாலட்டில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Shop, park for free: Dubai motorists can save on parking at local stores

இந்த முயற்சி, வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிப்பதன் மூலம் சிறு மற்றும் சுற்றுப்புற வணிகங்களுக்கு ஆதரவளிப்பதையும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பார்க்கிங் இடங்களை மேலும் மலிவானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் உட்பட சுமார் 15 கடைகள் இதன் ஆரம்பகட்ட அறிமுகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அம்சம் வருகின்ற மே மாத தொடக்கத்தில் செயலியில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shop, park for free: Dubai motorists can save on parking at local stores

நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, பங்கேற்கும் சில நிறுவனங்களில் சைக்கிள் 2 சைக்கிள் (Cycle 2 Cycle), பெய்ரூட் பிளெண்ட்ஸ் (Beirut Blendz), ஏஐ எம்ப்ராடூர் (AI Embratoor), சான் டியாகோ கீ கட்டிங் (San Diego Key Cutting), ரவி ரெஸ்டாரன்ட் (Ravi Restaurant), சோயம் வெஜிடேரியன் (Soam Vegetarian), தம்யாதி பிளஸ் (Damyati Plus), தி லாண்ட்ரி ஹப் (The Laundry Hub) மற்றும் நைஃப் பேக்கர் (Naif Baker) ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

இது செயல்படும் விதம் எளிமையானது ஆகும். வாகன ஓட்டிகள் பங்கேற்கும் வணிக நிறுவனத்திற்கு அருகிலுள்ள, எந்தவொரு கட்டண பார்க்கிங் இடத்திலும் வாகனத்தை நிறுத்தி, பங்கேற்கும் கடையில் ஒரு பொருளை வாங்க வேண்டும். பின்னர், வணிகர் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலி மூலம் அந்த பார்க்கிங் இடத்தைச் சரிபார்ப்பார். அதன்பிறகு, கேஷ்பேக் உடனடியாக பயனரின் பார்க்கின் வாலட்டில் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு அன்றாட பார்க்கிங் வசதியை அப்பகுதி கடைகளுடன் இணைத்து, நகரம் முழுவதும் உள்ள சிறு வணிகங்களை மக்கள் ஆராய்ந்து ஆதரிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel