ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களால் ஈர்க்கப்பட்ட மனவுறுதி மற்றும் தன்னம்பிக்கையின் செய்தியை வலுப்படுத்தும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “ஐக்கிய அரபு அமீரகம் கவர்ச்சிகரமானது. ஐக்கிய அரபு அமீரகம் அழகானது,” என்ற ஜனாதிபதியின் நன்கு அறியப்பட்ட வார்த்தைகளுடன் தொடங்கும் இந்தக் வீடியோவில், “இறைவன் ஐக்கிய அரபு அமீரகத்தையும், அதன் மக்களையும், அதில் உள்ள அனைவரையும் பாதுகாகட்டும்” என்ற பிரார்த்தனையும், “நாம் இன்னும் வலிமையாக வெளிவருவோம் என்று நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்” என்ற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.
புர்ஜ் கலிஃபா, புர்ஜ் அல் அரப் மற்றும் துபாய் ஃபிரேம் போன்ற முக்கிய இடங்கள் உட்பட துபாயின் பரந்த காட்சிகளைக் கொண்ட இந்த வீடியோவானது, அமீரகத்தின் அன்றாட வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் பொதுமக்களின் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அதனுடன், ஜனாதிபதியின் புகைப்படத்தையும், அவரது தலைமைத்துவத்தைப் பாராட்டும் ஒரு கவிதையையும் ஷேக் ஹம்தான் பகிர்ந்துள்ளார். அதில், அவரை மரியாதை, வலிமை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம் என்று வர்ணித்துள்ளார்.
மேலும், “ஒப்பிடமுடியாத, பிரகாசமான மகிமையின் உருவம் அவர், தன் ஒளியை ஒருபோதும் இழக்காத கௌரவத்தின் சுடர், பலர் வாக்குறுதி அளிக்கலாம், ஆனால் சிலரே உண்மையாக நிலைத்து நிற்கிறார்கள், அவர் தன் மண்ணின் மைந்தனைப் போல, கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறார். நம்பிக்கையான அடிகளுடனும் ஒரு தலைவரின் பெருமையுடனும், முகமது பின் சையத் கௌரவத்தை வழிகாட்டியாகக் கொண்டு நடக்கிறார்” என்றும் அந்த கவிதையில் ஷேக் ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத்த்திற்கும் மேலாக அமீரகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சவாலான காலங்களில், நாட்டின் இறையாண்மையை ஒற்றுமையுடன் பாதுகாத்த அமீரக தலைமையின் வலிமையையும், தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மேற்கோள்காட்டி, ஷேக் ஹம்தான் வெளியிட்ட இந்தப் பதிவு ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் பரந்த செய்தியைப் பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel