ADVERTISEMENT

சர்வதேசப் பயணங்களுக்கான உலகின் பரபரப்பான விமான நிலையம்.!! முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்ட DXB!!

Published: 15 Apr 2026, 9:09 PM |
Updated: 15 Apr 2026, 9:09 PM |
Posted By: Menaka

2025-ஆம் ஆண்டில் உலகளவில் அதிகமான சர்வதேச பயணிகளை கையாண்டதன் மூலம், சர்வதேசப் பயணிகள் போக்குவரத்திற்கான உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற தனது பட்டத்தை துபாய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் (DXB) மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைகளின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சர்வதேசப் பயணிகள் போக்குவரத்து 4 பில்லியனை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கையில் உலகின் பல நாடுகளிலிருந்தும் அமீரகத்திற்கு பயணித்த பயணிகள் மற்றும் துபாய் ஏர்போர்ட் வழியாக மற்ற நாடுகளுக்கு பயணித்த பயணிகள் என அதிகளவிலான சர்வதேச பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தியதன் மூலம் இந்த சாதனையை துபாய் தக்கவைத்துள்ளது.

மேலும், உள்நாட்டு பயணிகள் மற்றும் சர்வதேச பயணிகள் என 2025ம் ஆண்டில் பயணித்த மொத்தப் பயணிகள் போக்குவரத்தில், உலகளவில் இரண்டாம் இடத்தையும் துபாய் சர்வதேச விமான நிலையம் தக்கவைத்துக் கொண்டது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, 95.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டு DXB உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சாதனையைப் படைத்துள்ளது.

ADVERTISEMENT

2025ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் படைத்த இந்த சாதனை ஒரு முறை நிகழ்ந்த சாதனை அல்ல. சர்வதேச பயணிகளின் முதல் தேர்வாக துபாய் ஏர்போர்ட் இருந்து வருகிறது. அதனை மெய்பிக்கும் வகையில் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச பயணிகள் தரவரிசையில் துபாய் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

  • 2024: 92.3 மில்லியன் பயணிகள், சர்வதேசப் போக்குவரத்தில் உலகளவில் முதலிடம்
  • 2023: நீண்ட தூரப் பயணங்களுக்கான தேவை வலுவாக அதிகரித்ததால், சர்வதேசத் தரவரிசைகளில் முதலிடம் பிடித்தது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும்,உள்கட்டமைப்புத் தடைகள், விமான விநியோகத் தாமதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து இடங்கள் போன்றவற்றால் முக்கிய விமான நிலையங்கள் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இருப்பினும் கண்டங்களை இணைத்து, சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம், சர்வதேசப் பயணத்தை வலுப்படுத்தும் ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக துபாய் ஏர்போர்ட் தனித்து நிற்கிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel