ADVERTISEMENT

அபுதாபியில் ரப்தான் பஸ் இன்டர்சேஞ்ச் மூடல்: பயணிகள் மாற்று மையங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்.!!

Published: 16 Apr 2026, 8:10 PM |
Updated: 16 Apr 2026, 8:10 PM |
Posted By: Menaka

அபுதாபியில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் தங்கள் தினசரி பயண முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், நேற்று ஏப்ரல் 15 முதல் ஒரு முக்கியப் போக்குவரத்து நெட்வொர்க் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

ஆம், அபுதாபியில் உள்ள ரப்தான் (Rabdan) பஸ் இன்டர்சேஞ்சை மூடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எமிரேட் முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில், அங்கிருந்து இயக்கப்பட்ட பொதுப் பேருந்து சேவைகள் தற்போது மேம்படுத்தப்பட்ட மாற்று மையங்களுக்குத் திருப்பிவிடப்படுகிறது.

இது தொடர்பாக ‘அபுதாபி மொபிலிட்டி’ (Abu Dhabi Mobility) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரப்தானில் இருந்து பயணிக்கும் பயணிகள் இனி அல் கனா (Al Qanah) மற்றும் அல் மக்தா மால் (Al Maqta’a Mall) ஆகிய இடங்களில் அமைந்துள்ள புதிய போக்குவரத்து மையங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது

ADVERTISEMENT

பாதிக்கப்படும் வழித்தடங்கள்

இந்தப் புதிய அமைப்பின் கீழ், பின்வருவன உட்படப் பல பேருந்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன: அவை,

  • 407, 300, 203, 101
  • L42, X5, A10, Q3
Abu Dhabi to close Rabdan Bus Interchange from April 15
Abu Dhabi to close Rabdan Bus Interchange from April 15
Abu Dhabi to close Rabdan Bus Interchange from April 15

முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
  • L42 மற்றும் X5 வழித்தடப் பேருந்துகள் இனி அல் கனா மையத்தில் தொடங்கி அங்கேயே முடிவடையும்.
  • Q3 வழித்தடப் பேருந்து அல் கனா மற்றும் அல் மக்தா மால் ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்.

மேலும், இந்தப் புதிய மாற்றத்திற்குப் பயணிகள் எளிதாகப் பழகிக்கொள்ள உதவும் வகையில், அல் ஜசீரா விளையாட்டு மன்றத்திற்கு (Al Jazira Sports Club) அருகில் ஒரு தற்காலிகப் பேருந்து நிறுத்தமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம், அபுதாபியின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள வழித்தடங்களைச் சீரமைத்து, அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இருப்பினும், ரப்தான் மையத்தைப் பயன்படுத்தி வழக்கமாகப் பயணிப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, புதிய மையங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்துத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel