கொரோனா வைரஸ் : துபாய் சைக்கிள் டூர் 2020 இறுதிக்கட்டத்தில் நிறுத்தம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடத்திற்கான துபாய் சைக்கிள் டூர்-2020 கடந்த பிப்ரவரி 23 ம் தேதி துபாய் நகரில் ஆரம்பித்து பல்வேறு நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் துபாய் நகரிற்கு வந்திருந்தனர். இப்போட்டியானது துபாய், ஹத்தா,அல் குத்ரா, அல்-அய்ன், அல் ருவைஸ், அல் மரியா ஐலண்ட் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் துபாய் முதல் அல்-அய்ன் வரையிலான போட்டிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருந்த நிலையில் துபாய் சைக்கிள் பந்தயம் (Dubai Cycle Tour 2020), தற்பொழுது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், துபாய் சைக்கிள் பந்தயத்திற்கு வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த பந்தய வீரர்கள் இருவருக்கு கொரோனா இருப்பதற்கு உண்டான அறிகுறி தென்பட்ட நிலையில் அது அபுதாபி சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. துபாய் சைக்கிள் டூர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், தற்பொழுது இந்த இருவருக்கும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அபுதாபியில் இரண்டு ஹோட்டலில் தங்கி இருந்த இவர்களுக்கு சுகாதார துறை மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக அபுதாபி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அபுதாபின் யாஸ் தீவில் (Yas Island) அமைந்துள்ள இரு ஹோட்டல்களில் இரண்டு இத்தாலிய அணியுடன் தங்கியிருந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைதுறை தெரிவித்துள்ளது. மேலும் மற்றவர்கள் அனைவரும் முறையான மருத்துவப் பரிசோதனை முடியும் வரை அவர்கள் அனைவரும் அபுதாபி சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட இருவருக்கும் சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும மேலும், அபுதாபியின் சுகாதாரத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்