சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 168 வது படத்தின் தலைப்பு “அண்ணாத்த”
தர்பார் படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் மீனா,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் எனப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
பெயரிடப்படாமல் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இப்படத்திற்கு “அண்ணாத்த” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான படங்களை இயக்கும் சிவா அதே பாணியில் இந்த படத்தையும் இயக்கி வருவதாகத் தெரிகின்றது. படத்தின் பெயர் தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் டைட்டில் லுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.