வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: அமீரகம் முழுவதும் அதிவேகத்துடன் வீசும் தூசு புயல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் அதிவேகத்துடன் தூசியுடன் கலந்த காற்று வீசுவதால் வாகனம் ஓட்டுபவர்கள் கவனத்துடன் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி (National Center of Meteorology), ஓரளவு மேகமூட்டமான சூழ்நிலைகளுடன், அமீரகத்தின் பல பகுதிகளில் தூசி மற்றும் மணல் வானத்தை நிரப்பும்.
#Alert #Dust_Alert #NCM pic.twitter.com/N65PCVCGxp
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 25, 2020
அதிவேகத்துடன் வீசும் காற்றே சாலை முழுவதும் தூசியில் மூடப்படுவதற்கு காரணமாகும். மணிக்கு 20 முதல் 30 கி.மீ வரை வீசக்கூடிய காற்று இன்று முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில சமயம் காற்றின் வேகமானது மணிக்கு 45 கி.மீ வரையிலும் இருக்கும்.
இன்று இரவு 8 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் காற்று மற்றும் தூசி நிறைந்த சூழ்நிலைகள் காரணமாக அமீரகத்தின் உள் பகுதிகளில், குறிப்பாக அபுதாபியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை சுமாராக 30 டிகிரி செல்ஸியசில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது