அமீரக செய்திகள்
அமீரகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு..???
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிலிப்பைன்ஸ், லெபனான், பிரிட்டன், இத்தாலி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து ஒருவரும் மற்றும் இந்தியாவை சேர்ந்த மூவரும் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் அமீரகத்தில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 98 ஆக உயர்ந்துள்ளது.