அமீரக அரசின் அதிரடி முடிவு..!!! அமீரகத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் ஒவ்வொரு நபரும் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலின் நடைமுறைகளை மீறுபவர், அவர் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது சட்டம் மற்றும் பொது ஒழுங்கை மீறுவதாகும். எனவே, உத்தரவை மீறும் எவருக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17 முதல் ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டினருக்கான அனைத்து நுழைவு விசாக்களையும் நிறுத்தியது. டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது அமீரகத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.