அமீரகத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.. பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 140 ஆக உயர்வு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மக்களைப் பாதுகாப்பதற்கும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கும் ஒரு விரிவான சுகாதார அமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்திடம் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுதலைத் தடுக்க பொது மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 அமீரக குடிமக்கள், சிரியா நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் ஆகிய 5 நபர்கள் தற்பொழுது குணமடைந்துள்ளதால், அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 31 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.