அபுதாபியில் நாளை முதல் பார்க்கிங் கட்டணம் இல்லை..!!! அபுதாபி முனிசிபாலிடி மற்றும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!!
அபுதாபி முனிசிபாலிடி மற்றும் போக்குவரத்துத் துறை மார்ச் 30 முதல் (திங்கள்) முதல் அடுத்த மூன்று வார காலத்திற்கு மவாகிஃப் பார்க்கிங் கட்டணத்தை (Mawaqif parking fees) நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த கட்டணங்களை இடைநிறுத்துவதற்கான முடிவு, கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் குடியிருப்பாளர்கள் மீதான பொருளாதார சுமையை குறைப்பதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் பல முயற்சிகளில் ஒன்றாகும். இந்த முடிவானது கொள்கை திருத்தம் மற்றும் நீட்டிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.@AbuDhabiDMT announces the suspension of Mawaqif parking fees for a period of three weeks starting from tomorrow Monday and subject to revision and extension pic.twitter.com/CCuNIGrRjD
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) March 29, 2020
இதனடிப்படையில், அபுதாபியில் வாகன ஓட்டிகள் திங்கள்கிழமை (நாளை) முதல் மவாகிஃப் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இதனை அமீரக போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டாளர் இன்று அறிவித்தார்.