அமீரக செய்திகள்

துபாயில் Metro, Bus மற்றும் Taxi பயன்படுத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!! பயண நேரங்களை முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தல்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொதுமக்களுக்கு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமீரகவாசிகள் அவரச தேவையை தவிர பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் காரணமாக உச்ச கட்ட நேரங்களில் குறிப்பாக அலுவலகத்திற்கு செல்லும் நேரங்களில் தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பயணிகள் தங்களின் பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு அதன் படி செயல்படுமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பேருந்து, மெட்ரோ மற்றும் இதர பொது போக்குரவத்துக்குண்டான அனைத்து நிலையங்களிலும் பயணிகளை கண்காணிப்பதற்காக ஒரு மேற்பார்வையாளரை நியமித்துள்ளதாகவும், மக்கள் இருக்கும் இடங்களில் செல்லும் போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல தடுப்பு நடவடிக்கைகளை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் மெட்ரோ:

> ஒருவருக்கொருவர் இடையேயான சமூக இடைவெளியை (social distance) கடைபிடிக்கும் வகையில் பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.
> மெட்ரோ பயண சேவைகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள்:

> துபாயின் அனைத்து பேருந்து நிறுத்தங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
> பேருந்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சமூக இடைவெளியை (social distance) கருத்தில்கொண்டு கணிசமாக குறைக்கபட்டுள்ளன.
> பேருந்து முன் மற்றும் நடுத்தர கதவுகள் மட்டுமே திறக்கப்படும். பின்புற கதவு மூடப்பட்டிருக்கும்.

டாக்ஸி:

> டாக்சியின் முன்புற இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
> பின்புற இருக்கையில் ஒரு டாக்ஸிக்கு இரண்டு பயணிகள் என எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும் RTA, “இந்த நடவடிக்கைகளின் நோக்கம், பயணிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவைகளை உலகளாவிய தரத்தில் வழங்குவதோடு பயணிகளிடையே சமூக இடைவெளியை (social distance) அமல்படுத்துவதும் ஆகும்” என்று கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!