துபாயில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க 11 நாட்கள் நடைபெறும் மாபெரும் சுத்திகரிப்பு பணி..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவற்றில் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில், துபாய் நகராட்சி (Dubai Municipality) சனிக்கிழமை அதிகாலை முதல் 11 நாட்களுக்கு மிகப்பெரியளவிலான சுகாதார திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் துபாயில் உள்ள சாலைகளில் குறைந்தது 95 தெருக்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் மேற்பார்வையில் துபாயில் இருக்கும் அல் ரிகா தெருவில் ஆரம்பிக்கப்படும் இந்த சுத்திகரிக்கும் பணியானது குறைந்தது 95 தெருக்கள் வரை நீட்டிக்கப்படும்.
சுகாதாரப்பணிகள் தெருக்களில் செயல்படுத்தும் போது அந்தந்த தெருக்களில் மக்கள் நடமாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிருமிநாசினி நடவடிக்கைகளின் போது பணியிடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும், பொதுப் பாதுகாப்பு நலனுக்காக சிறப்புப் பணிக்குழு தனது பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் நகராட்சி பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe“சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த” அணிகள் லாரிகள் அல்லது கார்களில் தெளிக்கும் இயந்திரங்கள் (spraying machines on trucks or cars), ஒரு கிருமிநாசினி ஃபோகிங் இயந்திரம் (disinfectant fogging machine), நீராவி சுத்தம் செய்யும் இயந்திரம் (steam cleaning machine) மற்றும் ஒரு கிருமிநாசினி தெளிப்பான் (disinfectant sprayer compressed machine) ஆகியவற்றைப் பயன்படுத்தி சாலைகளை சுத்தம் செய்யவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார பணிகளை மேற்கொள்ளும் தெருக்களின் விபரங்கள்:
ஒன்றாம் நாள் :
- Naif St
- Al Rigga St
- Al Murraqabat St
- Baniyas St
- Al Khor St
- Al Rasheed St
- Abu Hail St
- Al Maktoum St
- Al Quds St
- Al Nahda St
- Port Saeed St
இரண்டாம் நாள் :
- Souk Deira St
- Al Wahida St
- Hor Al Anz St
- Hor Al Anz East St
- Doha St
- Damascus St
- Beirut St
- Cairo St
- Al Quds St
- Abu Bakr Seddiq St
மூன்றாம் நாள் :
- King Salman Bin Abdulaziz Al Saud St
- Umm Al Sheif St
- Umm Suqeim St
- Al Hadiqa Street
- Jumeirah St
- 2nd of December St
- Al Thanya St
- Al Safa St
- Al-Badaa St
- Al Manara St
- Al Wasl St
- Trade Center St
- Financial Center St
- Al Mustaqbal St
நான்காம் நாள் :
- Sheikh Mohammed bin Rashid Blvd
- Financial Center St
- Happiness St
- 2nd Zabeel St
- Oud Metha St
- Al Satwa St
- Sheikh Zayed Road
- Al Khail St
ஐந்தாம் நாள் :
- Al Mankhool St
- Al Mina Rd
- Khalid Bin Al Waleed Rd
- Sheikh Rashid Road
- Riyadh St
- Al Seef St
- Al Ghubaiba Rd
- Kuwait St
- Umm Hurair Rd
ஆறாம் நாள் :
- Amman St
- Khartoum St
- Algeria St
- Tunis St
- Baghdad St
- Halab St
- Beirut St
- Damascus St
- Doha St
ஏழாம் நாள் :
- Al Khawaneej St
- Rabat St
- Airport Rd
- Al Warqa’a 1 St
- Tripoli St
- Nad Al Hamar Rd
- Ras Al Khor St
- Al Warqa’a 2/3/4 St
- Al Amardi St
எட்டாம் நாள் :
- Warsan 1 St
- Manama St
- Nad Umm Al Hasa St
- Al Meydan Rd
- International City St
ஒன்பதாம் நாள் :
- Al Marabea’ St
- Al Asayel St
- Al Barsha St
- Hessa St
- Al Khamila St
- Latifa Bint Hamdan St
- Al Naseem St
- First Al Khail St
- Al Suhool Street
பத்தாம் நாள் :
- Me’aisam St
- Al Qudra Rd
- Al Fay Rd
- Qarn Al Sabkha Rd
- Al Yalayis St
- Expo Road
- Al Maktoum Airport Rd
பதினொன்றாம் நாள் :
- Stables St
- Seeh Al-Dahl St
- Seeh Al Salam St
- Al Habab St