கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனையின் முதல் டோஸ் செலுத்த முடிவு …!!! ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!!
உலகளவில் கொரோனா வைரஸால் 1,56,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மற்றும் 5,800 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைக்கான முதல் டோஸ் (Dose) திங்கள்கிழமை (இன்று) வழங்கப்படும் என US ல் இருக்கும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையில், முதல் தன்னார்வலர் திங்களன்று ஒரு முதல் டோஸைப் பெறுவார் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சியாட்டிலிலுள்ள கைசர் பெர்மெனன்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (Kaiser Permanente Washington Health Research Institute) நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவனங்கள் (National Institutes of Health) நிதியுதவி செய்கின்றன. முதல் தன்னார்வலருக்கான திட்டங்களை வெளிப்படுத்திய அதிகாரி, தன்னார்வலரின் விபரங்களை வெளியிடவில்லை. ஏனெனில் இந்த நடவடிக்கை பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
எந்தவொரு தடுப்பூசியையும் முழுமையாக சரிபார்க்க ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
NIH மற்றும் மாடர்னா இன்க் (Moderna Inc) இணைந்து உருவாக்கிய தடுப்பூசியானது, 45 ஆரோக்கியமான மற்றும் இளவயதுடைய தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு டோஸ்களில் உட்செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். பங்கேற்பாளர்கள் இந்த மருந்துகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, ஏனெனில் அவர்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை. இதன் முக்கிய குறிக்கோள் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பதை சோதனையிடுவதாகும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சி குழுக்கள் தடுப்பூசி ஒன்றை உருவாக்க போட்டியிடுகின்றன. முக்கியமாக, அவர்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளைப் பின்தொடர்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்களிலிருந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள், பாரம்பரிய தடுப்பூசிகளைக் காட்டிலும் விரைவாக உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் அதிக சக்திவாய்ந்தவை என்பதை நிரூபிக்கக்கூடும். சில ஆராய்ச்சியாளர்கள் தற்காலிக தடுப்பூசிகளை நோக்கமாகக் கொண்டுள்ளனர், அதாவது ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடிய தடுப்பூசிகள் போன்றவை இதிலடங்கும்.
இன்றுவரை, கொரோனா வைரஸிற்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. சீனாவில், விஞ்ஞானிகள் புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக எச்.ஐ.வி (HIV) மருந்துகளின் கலவையையும், எபோலாவை எதிர்த்துப் போராடுவதற்கான வளர்ச்சியில் இருந்த ரெம்டெசிவிர் (remdesivir) என்ற பரிசோதனை மருந்தையும் சோதித்து வருகின்றனர். US இல் இருக்கும், நெப்ராஸ்கா மருத்துவ மையமும் ஜப்பானில் ஒரு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் COVID-19 இருப்பதைக் கண்டறிந்த சில அமெரிக்கர்களிடமிருந்து ரெம்டெசிவிர் (remdesivir) எனும் மருந்தை பரிசோதிக்கத் தொடங்கியது.
பெரும்பாலான மக்களுக்கு, புதிய கொரோனா வைரஸ், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. சிலருக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, இது நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
பெரும்பான்மையான மக்கள் இந்த கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வருகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, லேசான நோய் உள்ளவர்கள் சுமார் இரண்டு வாரங்களில் குணமடைவார்கள். அதே நேரத்தில் கடுமையான நோய் உள்ளவர்கள் குணமடைய மூன்று வாரங்கள் முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளது .