குவைத் நாட்டிற்குள் 10 நாட்டவர்கள் நுழைய தடை???

கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மத்திய கிழக்கு நாடுகளில் அதிவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஈரான். அதற்கு அடுத்தபடியாக குவைத் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால், குவைத் நாட்டிற்குள் மேலும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தியா, துருக்கி, எகிப்து, பங்களாதேஷ் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அந்தந்த நாடுகளில் உள்ள குவைத் தூதரகங்களில் தாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற்ற பின்னரே, குவைத் நாட்டிற்குள் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளது.
சான்றிதழ்களை வழங்காத பயணிகளை குவைத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று விமான அதிகாரசபை ட்விட்டரில் போடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்த நடைமுறையானது, மார்ச் 8 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுதுள்ள நிலவரப்படி, குவைத்தில் 56 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவைத் அதிகாரிகள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தாமதமாக மேற்கொண்டுள்ளனர். இதில் வைரஸ் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் இரண்டு வாரங்களுக்கு சிறைச்சாலைகளுக்குண்டான வருகை தடை போன்ற நடவடிக்கைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.