வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியாவின் பிரீமியம் ரெசிடென்ஸியை பெற்ற முதல் இந்தியர் !!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமான லுலு குழுமத்தின் தலைவர் MA.யூசுப் அலி அவர்கள் வெளிநாட்டினருக்கான சவுதி அரேபியாவின் பிரீமியம் ரெசிடென்சி பெர்மிட்டை (Premium Residency Permit) பெற்றுள்ளார்.

சவூதி அரசாங்கத்தின் பிரீமியம் ரெசிடென்சி மையம் திங்களன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் பிரீமியம் ரெசிடென்சியைப் பெற்ற பிறகு யூசுப் அலி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இவர் சவூதி அரசின் பிரீமியம் ரெசிடென்சி பெர்மிட்டை பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

இந்த பிரீமியம் ரெசிடென்சி பெர்மிட்டை சவுதியில் கிரீன் கார்டு என்று கூறப்படும்.
நவம்பர் 2019 இல், சவுதி அரேபியா 73 வெளிநாட்டினருக்கு பிரீமியம் ரெசிடென்சி என்ற ஒரு புதிய திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு சொத்து வாங்கவும், சவுதி ஸ்பான்சர் இல்லாமல் வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கிறது.

பிரீமியம் ரெசிடென்சி திட்டம் சவூதி அரேபியாவின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிறது. இது சவுதி பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

யூசுப் அலி ஒரு அறிக்கையில் கூறுகையில், “இது என் வாழ்க்கையில் மிகவும் பெருமையான தருணம். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய வெளிநாட்டினருக்கும் ஒரு பெரிய மரியாதை. HM.கிங் சல்மான், HRH.இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சவுதி அரேபியா அரசாங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.

மேலும், “இந்த புதிய நிரந்தர வசிப்பிட திட்டம், பிராந்தியத்தின் முக்கிய முதலீடு மற்றும் வணிக மையங்களில் ஒன்றாக சவுதி அரேபியாவை மேலும் உயர்த்துவதோடு, புதிய முதலீட்டாளர்களை இங்கு ஈர்க்கவும் தக்கவைக்கவும் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த முயற்சி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய நபர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.” என்று யூசுப் அலி கூறினார்.

சவூதி அரேபியாவில் அராம்கோ (ARAMCO) கமிஷனரிகள் மற்றும் நேஷனல் கார்ட்ஸ் சூப்பர் ஸ்டோர்ஸ்(National Guards super stores) உட்பட 35 க்கும் மேற்பட்ட ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை சொந்தமாகக் கொண்டு இயங்கி வருவது லுலு (Lulu) குழுமம்.

ஜூன் 2019 இல், யூசுப் அலி ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்ட் கார்டு மூலம் நீண்டகால ரெசிடென்சி விசாவைப் பெற்றார். அமீரகத்தில் குடியுரிமைக்கான கோல்ட் கார்டைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!