ஓமன் : சுற்றுலா விசாவுக்கு தற்காலிகத் தடை…!!! கொரோனா எதிரொலி…!!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன், அந்நாட்டிற்கு வரும் அனைத்து நாட்டவர்களுக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மார்ச் 15 முதல் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக ஓமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் அந்நாட்டில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும், வகுப்பறையை விட்டு வெளியே மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஆக்டிவிட்டிஸ் போன்றவற்றையும் தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது.
அனைத்து கப்பல்களும் ஓமன் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக அவசரமான நிலையைத் தவிர அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதலாக, மத சடங்குகள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சமுதாயக் கூட்டங்களின் போது தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சினிமா தியேட்டர்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.