குவைத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்..!!! பொது விடுமுறை மேலும் இரு வாரங்கள் நீட்டிப்பு..!!! கொரோனா எதிரொலி…!!!
குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் விதமாக அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை 5:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை உள்ள 11 மணி நேரங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று குவைத்தின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அனஸ் அல் சலேஹ் செய்தி மாநாட்டில் தெரிவித்துளார்.
அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களை வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொண்டும், பொது மக்கள் முறையாகக் கடைபிடிக்காததன் விளைவே ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 26 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் விடுமுறைக்காலம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.