அமீரகம் : ஷார்ஜாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் “Work from Home” முறை அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஷார்ஜா அரசு, கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு “Work from Home” முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஷார்ஜா அரசாங்கத்தின் மனிதவளத் துறைத் தலைவர் தாரிக் பின் காதிம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஷார்ஜாவின் அரசாங்க வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். பணியிடத்திற்கு நேரடியாகச் சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரே இடத்தில் அனைத்து பணியாளர்களும் கூடுவதைத் தவிர்க்க, பணியாளர்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஷிஃப்ட் அடிப்படையிலான வேலையையும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, தனியார் துறையில் தற்காலிகமாக வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.