அமீரக செய்திகள்

துபாய் Metro, Bus, Taxi, Tram சுத்திகரிப்பு பணிகள் நிறைவு..!!! RTA தகவல்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கு எதிராக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் உள்துறை அமைச்சகம் (MOI) இணைந்து மேற்கொண்ட தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக துபாயில் உள்ள அனைத்து 47 மெட்ரோ நிலையங்கள் (Metro Station), 79 மெட்ரோ ரயில்கள் (Metro Train), 11 டிராம் நிலையங்கள் (Tram Station) மற்றும் 11 துபாய் டிராம்களில் (Tram) சுத்திகரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

மேலும் RTA கூறுகையில், இதுவரையிலும் 1,372 பேருந்துகளை சுத்திகரிக்கும் பணியை முடித்துள்ளதாகவும், தற்போது 5 பேருந்து டிப்போக்கள் (Bus Depot) மற்றும் 17 பேருந்து நிலையங்களை (Bus Shelter) சுத்திகரிப்பு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், துபாயில் இயங்கும் அனைத்து துபாய் டாக்ஸிகள் (Taxis), லிமோசைன்கள் (Limousine) மற்றும் Smart Rental வாகனங்கள் ஆகியவற்றிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இது எண்ணிக்கையின் அடிப்படையில் 17,000 க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தர் அல் டயர் (Mattar Al Tayer) கூறுகையில், அதிகபட்ச தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைமைத்துவத்தின் கட்டளைகளை செயல்படுத்த RTA செயல்பட்டு வருகிறது. பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன், பொது போக்குவரத்து பயனாளர்களை பாதுகாக்கும் முயற்சிகளில் RTA மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை வழங்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அரசின் அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதிலும் மற்றும் உலக சுகாதார மையத்தால் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவலை ஜீரோ சதவீதமாக மாற்ற RTA நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த தேசிய ஸ்டெர்லைசேஷன் திட்டத்தின் போது துபாய் டாக்சிகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின், சுமார் 1,000 டாக்சிகளை RTA பயன்படுத்தியது. பயன்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் சுத்திகரிப்பு செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!