“Tawajudi for residents” வெளிநாட்டில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கான புதிய சேவை தொடக்கம்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) தனது இணையதளத்தில் வெளிநாடுகளில் இருக்கும் ரெசிடென்ஸ் விசா உடையவர்களுக்கான ஒரு புதிய சேவையை (“Tawajudi for residents”) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சேவை வெளிநாடுகளில் இருக்கும் அமீரக ரெசிடென்ஸ் விசா உடையவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை அவசரகால சூழ்நிலைகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் MoFAIC இன் வலைதளம் மூலம் இந்த சேவைக்கு பதிவு செய்யலாம். இதனால் அவசர காலங்களில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
அமைச்சகத்தின் பிரதான வலைதளத்தில் இருக்கும் “Individuals Services” என்பதை கிளிக் செய்து பின்னர் அதன் கீழ் வரும் “Tawajudi for residents” என்பதை கிளிக் செய்வதன் மூலம் இந்த சேவையை அணுகலாம்.
இந்த நடவடிக்கை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் மூலம் அமீரகத்தில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அவசரகால நிகழ்வுகளில் அவர்கள் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்குவதற்கும் வழிவகுக்கிறது.