அமீரக செய்திகள்

Al Ras, Palm Deira, Baniyas Square மெட்ரோ நிலையங்கள் இரு வாரங்களுக்கு மூடல்..!!! RTA அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோன வைரஸின் தாக்கத்தைத் தொடர்ந்து துபாயில் கிரீன் லைனில் இயக்கப்படும் மெட்ரோ ஸ்டேஷன்களில் (green line) உள்ள அல் ராஸ் (Al Ras), பாம் தேரா (Palm Deira) மற்றும் பனியாஸ் (Baniyas Square) ஆகிய மெட்ரோ நிலையங்கள் இன்று (மார்ச் 31,2020) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.


இது பற்றி RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

துபாயின் பேரிடர் மற்றும் நெருக்கடி மேலாண்மை குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management), அல் ராஸ் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய சுத்திகரிப்புத் திட்டத்தைத் (National Disinfection Programme) தொடர்ந்து அங்கு மக்கள் பொது வெளியில் அதிகம் நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து RTA வும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் துபாய் சுகாதார ஆணையத்தை சேர்ந்த குழுக்களின் மூலமாக வழங்கப்படும் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!